search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட்"

    பெங்களூருவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடி வரும் நிலையில், இன்று ஆப்கன் வீரர்கள் பாரம்பரிய முறையில் ரம்ஜான் கொண்டாடினர். #INDvAFG #EidMubarak
    பெங்களூரு:

    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் இந்திய அணி 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


    இந்நிலையில், ரம்ஜான் தினமான இன்று காலை போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி உட்பட அனைத்து வீரர்களும் பாரம்பரிய முறையில் ஆடை அணிந்து ரம்ஜானை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்த புகைப்படங்களை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


    ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாட தயாராகினர். ஆப்கன் வீரர்கள் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. #INDvAFG  #EidMubarak

    டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளைக்குள் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றார். #INDvAFG #Onlyonetest #ShikharDhawan
    பெங்களூரு:

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தவானின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை விளாசி தள்ளினார். 47 பந்தில் அவர் அரை சதத்தை தொட்டார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய தவான், மதிய உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்தார். 87 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். 30-வது டெஸ்டில் விளையாடும் தவானுக்கு இது 7-வது சதமாகும்.



    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய தவான் 96 பந்துகளில் 107 ரன்களில் யாமின் அகமத் ஜாய் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

    இந்த போட்டியில் ஷிகர் தவான் விரைவாக சதமடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளைக்குள் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஏற்கனவே, ஆஸ்திரேலிய வீரர்கள் விக்டர் டிரம்பர் (1902), சார்லி மெக்கார்ட்னி (1921), டான் பிராட்மேன் (1930), டேவிட் வார்னர் (2017) மற்றும் பாகிஸ்தான் வீரர் மஜித் கான் (1976) ஆகியோர் உணவு இடைவேளைக்குள் சதமடித்த மற்ற வீரர்களாவர். #INDvAFG #Onlyonetest ##ShikharDhawan
    ×